கலைஞர் நூற்றாண்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், நூற்றாண்டு விழா குழு உறுப்பினர்கள், 23 அணிகளின் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், நூற்றாண்டு விழா குழு உறுப்பினர்கள், 23 அணிகளின் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டை கொண்டாட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆலோசனை நடைபெறுகிறது.

நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர்” அவர்களின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலன் திட்டங்களையும் ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது என்றாலும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் தமிழ்நாடு முழுவதும் நடத்துவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.இக்கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள், அனைத்து அணிச் செயலாளர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: