டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க காலவரையற்ற ஸ்டிரைக் வாபஸ்

பெரம்பலூர், ஆக.18: பெரம்பலூரில் தொடங்கிய டிப்பர் லாரி உரிமையாளர் கள் சங்கத்தின் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பெரம்பலூர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் கடந்த 16ம்தேதி காலை முதல், அதிக பாரம் ஏற்றமாட்டோம், அதிக பாரம் ஏற்றும் வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் முடங்கியதால் தினமும் ரூ.20 கோடிக்கு மேலான வர்த்தகம் பாதித்ததோடு, கட்டுமானப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் கள் சங்கங்களின் கூட்ட மைப்பு மாநிலத் தலைவர் யுவராஜா நேரில் கலந்து கொண்டார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பெரம்பலூர் மாவட்ட கிரஷர், குவாரி உரிமையா ளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் நந்தகோபால் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் பெரம்பலூர் மாவட்ட கிரஷர்கள் மற்றும், குவாரிகளில் வருகிற 23ம் தேதி முதல் விலை குறைப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்படும், பெரம்பலூர் மாவட்ட லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி கூறியதின் பேரில் 16ம்தேதி இரவோடு டிப்பர் லாரி உரிமையாளர் கள் சங்கத்தின் காலவரை யற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

The post டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க காலவரையற்ற ஸ்டிரைக் வாபஸ் appeared first on Dinakaran.

Related Stories: