திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் இன்று திமுக அவசர செயற்குழு கூட்டம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தகவல்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அவசரசெயற்குழு கூட்டம் இன்று நடக்க உள்ளது என மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.ஜெ. கோவிந்தராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணியளவில் கும்முடிப்பூண்டி, ஜிஎன்டி சாலையில் உள்ள ஏவிஎஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் பகலவன் தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகிகள் கதிரவன், உமாமகேஸ்வரி, ரவி, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பேரூர் செயலாளர் அறிவழகன் வரவேற்கிறார். மாநில நிர்வாகிகள் கும்முடிப்பூண்டி வேணு, சுந்தரம், சிவாஜி, சேகர், மூர்த்தி, பாஸ்கர் சுந்தரம், அன்புவாணன், ஸ்டாலின், உதயசூரியன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, குணசேகரன், வெங்கடாசலபதி, சுப்பிரமணி, பரிமளம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பொன்னேரி தொகுதி அமுதரசன், கும்முடிப்பூண்டி தொகுதி அரசகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

மேலும், இதில் நீட் தேர்வை திணிக்கும் ஒன்றிய அரசுக்கு துணைபோகும் ஆளுநரை கண்டித்து 20ம் தேதி திருவள்ளூரில் நடைபெற உள்ள உண்ணாவிரதம் குறித்தும், கலைஞரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதால், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

The post திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் இன்று திமுக அவசர செயற்குழு கூட்டம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: