திருவேற்காடு, சிறுவாபுரி திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று (16.08.2023) ஆணையர் அலுவலகத்தில் திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் மற்றும் சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் மேற்கு கோபுரம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பொங்கல் மண்டபம், முடிக்காணிக்கை மண்டபம், நிர்வாக அலுவலகம், பக்தர்களுக்கான ஓய்வறைகள், வணிக வளாகம், பல்நோக்குகூடம் கட்டுதல், அன்னதானக்கூடம் விரிவாக்கம், சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது குறித்தும், சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அன்னதானக்கூடம், பக்தர்களுக்கான ஓய்வறைகள், வரிசை மண்டபம் கட்டுதல், கூடுதல் வாகனம் நிறுத்துமிடம் அமைத்தல், திருக்கோயிலுக்கு மாற்றுப்பாதை உருவாக்குதல் குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், இ.ஆ.ப., ந.திருமகள், சி.ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் சி.இசைஅரசன், இணை ஆணையர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவேற்காடு, சிறுவாபுரி திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: