மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் எடுத்த முயற்சியின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. குறிபாக வளையமாதேவி, மேல்பாதி, கீழ்பாதி, தென்குத்து, கற்றாலை, மும்முடி சோழன் உள்ளிட்ட 6 கிராமத்தை சேர்ந்த 1088 விவசாயிகளுக்கு இந்த இடப்பெயர்வு கருணை தொகை வழங்கபடுகிறது. இந்த முகாம் ஆனது இன்று தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் விடுபட்டவர்களுக்கு அடுத்த சில நாட்களில் எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து, சம்பந்தபட்ட ஆவணங்களை சமர்பித்து, இடப்பெயர்வு கருணை தொகை பெற்றுகொள்ளாம் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த முகாம் முடிந்தாலும் கூட சம்பந்தபட்ட விவசாயிகள் ஆவணங்களை கொடுத்து இடப்பெயர்வு கருணை தொகையை பெற்றுகொள்ளாம் என கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்துவருகின்றனர்.
The post என்எல்சியால் நிலம் கையகபடுத்தபட்ட 1088 விவசாயிகளுக்கு இன்று முதல் இடப்பெயர்வு கருணைத்தொகை வழங்கும் முகாம் appeared first on Dinakaran.
