ம.பியில் ஆணாக மாற பெண் காவலர் விருப்பம்: மாநில உள்துறை அனுமதி

போபால்: மத்தியபிரதேசத்தின் ரத்லாம் மாவட்ட காவல் நிலையத்தில் தீபிகா கோத்தாரி என்ற பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் ஆணாக மாற விருப்பம் தெரிவித்து மாநில உள்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று தீபிகா கோத்தாரி ஆணாக மாறுவதற்கு மாநில உள்துறை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மாநில உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராஜேஷ் ரஜோரா வௌியிட்டுள்ள அறிவிப்பில், “தீபிகா கோத்தாரிக்கு பாலின அடையாள கோளாறு இருப்பதால், அவர் ஆணாக மாற மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பாலின மாற்றத்தை அனுமதிக்க உரிய விதிகள் எதுவும் இல்லை. சட்டத்துறை கருத்துகளை பெற்று, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாலின மாற்றத்துக்கு பின் பெண் ஊழியர்களுக்கான சலுகைகளை காவலர் தீபிகா கோத்தாரி பெற முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ம.பியில் ஆணாக மாற பெண் காவலர் விருப்பம்: மாநில உள்துறை அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: