புரோ சாம்பியன்ஷிப் கோல்ப்: சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை: புரோ சாம்பியன்ஷிப் கோல்ப் தொடர் சென்னையில் நாளை தொடங்குகிறது. இது குறித்து தமிழ் நாடு கோல்ப் கூட்டமைப்பு நிர்வாகிகள் சீனிவாசன், சரவணன், ஜாவர், இந்திய கோல்ப் அமைப்பான பிஜிடிஐ நிர்வாகி உத்தம்சிங் மண்டி ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2வது முறையாக சென்னையில் ‘புரோ சாம்பியன்ஷிப் கோல்ப்’ போட்டி நடைபெற உள்ளது. ஆக.16 -19 வரை நடைபெறும் இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 126 வீரர்கள் பங்கேற்கின்றனர். அதில் ஓம்பிரகாஷ் சவுகான், நடப்பு சாம்பியன் அமன்ராஜ், கரண்பிரதாப் சிங், சச்சின் பைசோயா, கவுரவ்பிரதாப் சிங் ஆகியோர் முன்னணி வீரர்கள்.

மேலும் இலங்கையின் தங்கராஜா உட்பட ஜப்பான், வங்கதேச வீரர்கள் சிலரும் இந்தப் போட்டியில் விளையாட உள்ளனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்த பரிசுத் தொகையாக ₹50லட்சம் வழங்கப்பட உள்ளது. சென்னை காஸ்மோ கோல்ப் திடலில் நடைபெறும் போட்டியை காண பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். தொழில்முறை ஆட்டக்காரர்களும், பொழுதுபோக்கு ஆட்டக்காரர்களும் இணைந்து விளையாடும் ஒருநாள் ஆட்டம் ஆக.15ல் நடத்தப்படும் என்றனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சிமென்ட்ஸ் தலைமை சந்தை மேலாளர் பார்த்தசாரதி ராமனுஜம், பிஸ்லெரி நிறுவன சந்தைப்படுத்துதல் மேலாளர் துஷார் மல்ஹோத்ரா, கிரவுன் பிளாசா தலைமை மேலாளர் ஆனந்த் நாயர் ஆகியோர் பங்கேற்றனர்.

The post புரோ சாம்பியன்ஷிப் கோல்ப்: சென்னையில் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: