ஈரோட்டில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

 

ஈரோடு, ஆக. 13: ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நீர் தேங்கி நிற்காமல் இருக்கவும், டெங்கு கொசுக்களை கண்டறிந்து ஒழிக்கும் பணியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி தற்போது வீடு, வீடாக செல்லும் பணியாளர்கள் வீட்டில் வசிப்பவர்கள் விபரம், யாருக்கேனும் காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி, மூட்டு வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பது குறித்து விசாரித்து தகவல் சேகரிக்கின்றனர்.

மேலும், வீட்டின் தண்ணீர் தொட்டிகளை ஆய்வு செய்து, கொசுப்புழு அழிப்பு மருந்து அழிக்கின்றனர். மேலும் வீட்டில் பிரிட்ஜின் பின்புறம் கழிவு நீரை அகற்ற வேண்டும். வீட்டின் சுற்றுப்புற பகுதியில் தண்ணீர் தேங்காமலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் அறிவுறுத்தினர். டெங்கு கொசு ஒழிப்பு பணியில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க கடந்த 11ம் தேதி மாநகராட்சியில் தற்காலிக பணியாளர்களுக்கான நேர்காணல் நடந்தது. அதில் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் விரைவில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஈரோட்டில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: