செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஆக.13: காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு இணைந்து, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், செவிலியர் கிரேட் 1, கிரேட் மற்றும் இரண்டுக்கான ஊதியம் வழங்க வேண்டும்.

மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் சுகாதார நிலையங்களை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் விமலா தலைமை வகித்தார். பரமக்குடி சுகாதார மாவட்ட தலைவர் சியா முன்னிலை வகித்தார். கூட்டமைப்பு மாநில தலைவர் நிர்மலா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட நிர்வாகிகள் சாந்தி, இசைச்செல்வி, கோசலை, பானுமதி மற்றும் ஏராளமான கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

The post செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: