மவுண்ட் சீயோன் நர்சிங் கல்லூரியில் உலக மாநாடு

திருப்புத்தூர், ஆக. 12: புதுக்கோட்டை லேணா விலக்கு அருகே உள்ள மவுண்ட் சீயோன் நர்சிங் கல்லூரியில் உயிருக்கு ஆபத்தான தருணங்கள் மற்றும் உயிர்காக்கும் திறன்கள் என்ற தலைப்பில் உலகளாவிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு, மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் லாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்தார். கல்லூரியின் இயக்குனர் டாக்டர் ஜெய்சன் கே.ஜெயபாரதன் முன்னிலை வகித்தனர். மவுண்ட் சீயோன் செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜாஸ்மின் ஷீலா வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மற்றும் தலைமை பொறுப்பு வகிக்கும் டாக்டர் நரேந்திரநாத் ஜெனா சிறப்புரையாற்றினார். கர்நாடகா ஹெல்த் சிட்டி பி.ஜி.எஸ். குளோபல் செவிலிய மேலாளர் செவிலியர் புஷ்பா, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் ஹேமா, காரைக்குடி ஜே.எஸ்.பல்நோக்கு மருத்துவமனை தலைமை செவிலியர் ஏனிபிரிசில்லா,

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் பி.சதீஷ்குமார், சென்னை குளோபல் மருத்துவமனை தலைமை செவிலியர் ஸ்வேதா, கேரளா கே.எம்.சி.டி. செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் மஞ்சுளா, திருச்சி எஸ்.ஆர்.எம். செவிலியர் கல்லூரி இணை பேராசிரியர் சர்மிளா ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசினர். மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். நிறைவாக கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் ஜெரின்குமார் நன்றி கூறினார்.

The post மவுண்ட் சீயோன் நர்சிங் கல்லூரியில் உலக மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: