திருமலையில் ரூ.145 கோடி மதிப்பில் வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம் விரிவாக்க பணிக்கு பூமி பூஜை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி பணிகள் ரூ.145 கோடியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், அறங்காவலர் குழு தலைவர் பூமன கருணாகர், செயல் அதிகாரி தர்மா ஆகியோர் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்து, விரிவாக்க பணிக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். திருமலையில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் விசாலமான அருங்காட்சியகம் பார்வையாளர்களை கவரும் வகையில் உலகத்தரம் வாய்ந்ததாக விரிவாக்கம் செய்து, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். அருங்காட்சியகத்தில் மொத்தம் 19 கேலரிகள் அமைக்கப்படும், இந்த வளர்ச்சி பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும்.

The post திருமலையில் ரூ.145 கோடி மதிப்பில் வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம் விரிவாக்க பணிக்கு பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: