பாகம்பிரியாள் கோயிலில் ஆக.14ல் ஆடி மாத பூச்சொரிதல் விழா

 

திருவாடானை,ஆக.11: திருவாடானை அருகே திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோயிலில் இந்த ஆண்டு வருகிற ஆக.14ல் ஆடி மாத பூச்சொரிதல் விழா நடைபெறவிருக்கிறது. திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடி பூச்சொரிதல் விழா பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் கடைசி திங்கள் கிழமை அன்று நடைபெறும், இந்த ஆண்டு வருகிற 14ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.

விழா நடைபெறுவதையொட்டி கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், அம்மன் புஷ்ப பல்லக்கு அலங்காரத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். அன்று இரவு இன்னிசை கச்சேரி, வள்ளி திருமணம் நாடகம் மற்றும் வானவேடிக்கைகளும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருவெற்றியூர் கிராம பொதுமக்களும், வர்த்தக நல சங்கத்தினரும் செய்து வருகின்றனர்.

The post பாகம்பிரியாள் கோயிலில் ஆக.14ல் ஆடி மாத பூச்சொரிதல் விழா appeared first on Dinakaran.

Related Stories: