ஐஸ்வர்யா வீட்டில் நகை திருடிய வழக்கில் வங்கி கணக்கு முடக்கியதை எதிர்த்து பணிப்பெண் மனு: காவல்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, தன் வீட்டில் இருந்த 60 சவரன் தங்க நகைகள், வைர, நவரத்தின நகைகள் திருட்டுப் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வீட்டில் வேலை பார்த்த ஈஸ்வரியை கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட ஈஸ்வரி, அவரது மகள்களான இன்ஜினியர் பிருந்தா, மளிகை கடை உரிமையாளர் மஞ்சுளா ஆகியோரின் வங்கி கணக்குகளை முடக்கி தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் மந்தைவெளி கிளை மேலாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மூவரும் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில், ‘‘தங்கள் வங்கி கணக்குகளை முடக்கியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுளளது.கணக்கு முடக்கிய உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரித்து, இந்த மனுக்களுக்கு ஒரு வாரத்தில் காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

The post ஐஸ்வர்யா வீட்டில் நகை திருடிய வழக்கில் வங்கி கணக்கு முடக்கியதை எதிர்த்து பணிப்பெண் மனு: காவல்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: