திருப்பதி அன்னமய்யா மாவட்டத்தில் 3 வெவ்வேறு இடங்களில் 32 செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

திருப்பதி: திருப்பதி அன்னமய்யா மாவட்டத்தில் 3 வெவ்வேறு இடங்களில் 32 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அன்னமய்யா மாவட்டத்தில் வனப்பகுதியில் நடந்த வாகன சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட வெங்கடேசன், ஹரி, பொன்னுசாமி சரத், சின்னராஜி பச்சையப்பன், மணி, விஜயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post திருப்பதி அன்னமய்யா மாவட்டத்தில் 3 வெவ்வேறு இடங்களில் 32 செம்மரக்கட்டைகள் பறிமுதல்! appeared first on Dinakaran.

Related Stories: