கும்மிடிப்பூண்டியில் தென்னிந்திய யோகா போட்டிகள்

கும்மிடிப்பூண்டி,ஆக.10: கும்மிடிப்பூண்டியில் 17வது தென்னிந்திய யோகாசன போட்டிகள் நடைபெற்றன. கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் கைரளி யோகா மையம் மற்றும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் யோகா ஆராய்ச்சி மையம் சார்பில் 17வது தென்னிந்திய யோகா போட்டிகள் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தன. கைரளி யோகா மைய நிறுவனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போட்டி நடைபெற்றது. இந்த யோகா போட்டியில் தமிழகம், புதுவை, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து ஆயிரம் பேர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆவடி காவல் உதவி ஆணையர் ரமேஷ், கும்மிடிப்பூண்டி முன்னாள் வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ், தொழிலதிபர் கிளமெண்ட், ரோட்டரி சங்கத் தலைவர் ராஜகோபாலன் ஆகியோர் பங்கேற்று பதக்கம், சான்றிதழை வழங்கினர். இந்த போட்டியில், ஆண்கள் பிரிவில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் நகுலனும், பெண்கள் பிரிவில் காரைக்காலைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி லலிதாம்பிகையும் சாம்பியன் பட்டம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post கும்மிடிப்பூண்டியில் தென்னிந்திய யோகா போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: