சதுரகிரி வனப்பகுதியில் ஆடு, கோழி பலியிட தடை

திருவில்லிபுத்தூர்: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆக. 12 முதல் 6 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆடி அமாவாசைக்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இவர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் தாணிப்பாறையில் இருந்து சுந்தரமகாலிங்கம் கோயில் வரை சென்று ஆய்வு மேற்கொண்டனர். சதுரகிரி மலை அமைந்துள்ள வனப்பகுதியில் ஆடு, கோழி போன்றவற்றை பலியிட வனத்துறை தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக தாணிப்பாறை நுழைவாயில் பகுதியில் எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது.

The post சதுரகிரி வனப்பகுதியில் ஆடு, கோழி பலியிட தடை appeared first on Dinakaran.

Related Stories: