தனிநபர் சுதந்திரம் மற்றும் தங்குமிடம், குடிநீர், சுகாதாரம் ஆகிய அளவுகளிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற பகுதியாக திகழ்வதும் பாராட்டுக்குரியது. இங்கு உயர்கல்வி சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாவை மேம்படுத்த ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தனித்துவமான மற்றும் சிறப்பு வாய்ந்த யூனியன் பிரதேசமான புதுச்சேரி, தேசிய அளவிலும், உலகளவிலும், தனி முத்திரையை பதித்துள்ளது. மக்கள் இந்த யூனியன் பிரதேசத்தை இன்னும் உயர்ந்த வளர்ச்சி மற்றும் சிறப்பான இடத்துக்கு கொண்டு செல்வார்கள். மக்கள் அனைவருக்கும் ஒளிமயமான, வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.
* கருப்புக்கொடி காட்ட திட்டம் சமூக அமைப்பு நிர்வாகிகள் கைது
மணிப்பூர் கலவரம் பற்றி நேரில் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்காமல் புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு முருங்கப்பாக்கம் பகுதியில் கருப்புக்கொடி காட்டப்படும் என்று புதுச்சேரி மாநில பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தினர் அறிவித்தனர். இதையடுத்து இந்திய தேசிய இளைஞர் முன்னணி தலைவர் கலைபிரியன், சட்ட பஞ்சாயத்து இயக்கத் தலைவர் ஜெபின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பெரியார் சிந்தனையாளர் இயக்க அமைப்பாளர் தீனா, ஒருங்கிணைப்பாளர் சந்திரன், செயலாளர் பரத், துணை அமைப்பாளர் கர்ணா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
The post வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நெறிமுறைகளை புதுச்சேரி நிரூபிக்கிறது: ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு appeared first on Dinakaran.
