பெரும்பாக்கத்தில் உள்ள திரவுபதி அம்பாள் தர்மராஜா திருக்கோயிலில் திருக்கல்யாணம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர், பெரும்பாக்கத்தில் உள்ள திரவுபதி அம்பாள் சமேத தர்மராஜா திருக்கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவள்ளூர் நகராட்சியில் பெரும்பாக்கம், நேதாஜி சாலையில் திரவுபதி அம்பாள் சமேத தர்மராஜா திருக்கோயில் உள்ளது. இங்கு, ஆடி மாத யாக அக்னி வசந்த விழா வருகின்ற 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த அக்னி வசந்த விழாவை முன்னிட்டு மகாபாரத பெருவிழாவும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, கடந்த ஜூலை 28ம் தேதி விநாயகரும், வேதவியாசரம் என்ற தலைப்பிலும், 29ம் தேதி சந்திர மரபினில் சுந்தரன் யாதி என்ற தலைப்பிலும், 30ம் தேதி துஷ்டியந்தன், சகுந்தலை என்ற தலைப்பிலும், 31ம் தேதி சந்தனமும், கங்கையும் என்ற தலைப்பிலும், ஆகஸ்ட் 1ம் தேதி தர்மர் பிறப்பு தம்பியர் தோற்றமும் என்ற தலைப்பிலும், 2ம் தேதி கோகுலகிருஷ்ணன் திருஅவதாரம் என்ற தலைப்பிலும், 3ம் தேதி பாண்டவரும், கௌரவரும் என்ற தலைப்பிலும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, 4ம் தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அம்மனுக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும், 5ம் தேதி அம்மன் திருக்கல்யாணமும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கல்யாணமும் நடைபெற்றது. இதில், திருவள்ளூர் பெரியகுப்பம், மணவாளநகர், புல்லரம்பாக்கம் பாண்டூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு திரவுபதி அம்மன் திருக்கல்யாணத்தை கண்டு மகிழ்ந்தனர்.

இந்த திரவுபதி அம்பாள் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. யாக அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வருகின்ற 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அற நிலையத் துறை தக்கார் கலைவாணன் மற்றும் விழா குழுவினர், கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

The post பெரும்பாக்கத்தில் உள்ள திரவுபதி அம்பாள் தர்மராஜா திருக்கோயிலில் திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Related Stories: