ஹிஜாப் அணியாத பெண்களுக்கு சடலங்களை சுத்தம் செய்யும் பணி: ஈரான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெஹ்ரான்: ‘ஹிஜாப்’ சட்டத்தை மீறும் பெண்களுக்கு பிணங்களை சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட தண்டனைகளை ஈரான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஈரான் நாட்டில் முஸ்லீம் பெண்கள் அணியும் ஆடைகளில் ‘ஹிஜாப்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹிஜாப்புக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஹிஜாப் சட்டத்தை மீறும் பெண்களுக்கு கடுமையான தண்டனைகளை அந்நாட்டு நீதிமன்றம் செயல்படுத்தி உள்ளது. அதன்படி சமீபத்தில் ஹிஜாப் அணியாமல் பொது விழாவில் கலந்துகொண்ட ஈரானிய நடிகை அப்சானே பயேகன் உள்ளிட்ட சிலருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கியுள்ளது.

இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட நடிகை அப்சானே பயேகன், வாரத்திற்கு ஒருமுறை உளவியல் மையத்திற்கு சென்று தன்னை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். குடும்ப பழக்க முறைகளுக்கு விரோதமாக செயல்படுவதால், அவர் தனக்கு ஏற்பட்டுள்ள கோளாறைக் குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள நீதிமன்றம், ஹிஜாப் அணியாமல் வாகனம் ஓட்டி பிடிபட்ட பெண்ணுக்கு, மருத்துவமனைகளில் உள்ள பிணவறையில் சடலங்களை சுத்தம் செய்ய உத்தரவிட்டது. ஒரு மாதம் காலம் இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

The post ஹிஜாப் அணியாத பெண்களுக்கு சடலங்களை சுத்தம் செய்யும் பணி: ஈரான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: