கலைஞரின் 5வது நினைவு தினம்… மெரினா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை!!

சென்னை : கலைஞரின் 5வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், திமுக கட்சியின் முன்னாள் தலைவருமான கலைஞரின் 5வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் திருவாரூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கட்சியினர் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற்றது.

முன்னதாக கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்குமலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதைத் தொடர்ந்து, கலைஞர் சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரையில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அமைதிப் பேரணியில் ஏராளமான திமுக தொண்டர்களும் கருப்பு சட்டை அணிந்துபடி பங்கேற்றனர். இதையடுத்து சுமார் 9 மணி அளவில் மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அமைச்சர்கள், எம்பிக்கள், நிர்வாகிகளும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

The post கலைஞரின் 5வது நினைவு தினம்… மெரினா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை!! appeared first on Dinakaran.

Related Stories: