இம்ரான்கானை சந்திக்க வக்கீல்களுக்கு அனுமதி மறுப்பு

இஸ்லாமாபாத்: சிறையில் உள்ள இம்ரான்கானை வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தோஷகானா மோசடி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின்படி முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அட்டோக் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்ட போது நாடு முழுவதும் கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், ராணுவம் மற்றும் அரசின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

ஆனால், தற்போது தெஹ்ரீக் இன்சாப் கட்சியின் தலைவர் ஷா மெகமூத் குரேஷி,தெருக்களில் இறங்கி தொண்டர்கள் போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஆனால் பெரிய அளவில் போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. இதற்கு காரணம் கடந்த முறை நடந்த வன்முறையில் பல தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் கட்சியை விட்டே விலகி விட்டனர். இதனால் தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில்,கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரானை சந்திக்க வக்கீல்களுக்கு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.இதை கைது என்பதை விட கடத்தல் என்றே கூறலாம் என தெரிவித்துள்ளது.

The post இம்ரான்கானை சந்திக்க வக்கீல்களுக்கு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: