10, 12 வயதான சகோதரிகளை மிரட்டி பலாத்காரம் செய்த மாஜி ராணுவ வீரர் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே 10 மற்றும் 12 வயதான அக்கா, தங்கையை மிரட்டி பல மாதங்களாக பலாத்காரம் செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பூவார் பரணியம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி (56). ராணுவத்தில் பணிபுரிந்த இவர், ஓய்வு பெற்று பல நிறுவனங்களில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

மனைவி இறந்துவிட்டதால் ஷாஜி தனியாகத்தான் வீட்டில் வசித்து வந்தார். அதே பகுதியில் 10 மற்றும் 12 வயதிலான சிறுமிகள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தினருடன் ஷாஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் 2 சிறுமிகள் மீதும் ஷாஜிக்கு விபரீத ஆசை வந்துள்ளது. எப்படியாவது சிறுமிகள் இருவரையும் அடைந்தே தீரவேண்டும் என ஷாஜி திட்டமிட்டுள்ளார். இதற்காக சிறுமிகளின் குடும்பத்தாரிடம் நெருக்கம் காட்ட தொடங்கினார். அடிக்கடி பணம் கொடுத்து உதவியும் செய்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஷாஜி, 2 சிறுமிகளிடமும் நைசாக பேசி தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அப்போது ஆசைவார்த்தை கூறியும், மிரட்டியும் 2 சிறுமிகளையும் பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல் சிறுமிகளின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரங்களில் அவர்களின் வீட்டுக்கே சென்று பலமுறை பலாத்காரம் செய்தாராம். ஷாஜியின் ஆசைக்கு இணங்க மறுத்தபோது சிறுமிகளை கடுமையாக தாக்கவும் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறுமிகளுக்கு தொடர்ந்து இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த சிறுமிகளின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பள்ளி ஆசிரியை விசாரித்தபோது தான், சிறுமிகள் இருவரும் தங்களுக்கு ஷாஜி கொடுத்த பாலியல் தொல்லை குறித்து கதறி அழுதபடி கூறினார். இதுதொடர்பாக பூவார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post 10, 12 வயதான சகோதரிகளை மிரட்டி பலாத்காரம் செய்த மாஜி ராணுவ வீரர் கைது appeared first on Dinakaran.

Related Stories: