வாகன சோதனையில் நிறுத்தாமல் சென்ற கண்டெய்னர் லாரி: 45 கிலோ மீட்டர் தூரம் சேசிங் செய்து பிடித்த ஆந்திரா போலீஸ்

பெங்களூரு: ஆந்திராவில் திரைப்பட காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு நிறுத்தாமல் சென்ற கண்டெய்னர் லாரியை 45 கிலோ மீட்டர் தூரம் போலீசார் சேசிங் செய்து பிடித்தனர். விஜயவாடா சத்தீஸ்கர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து சென்றபோது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால், கண்டெய்னர் லாரியை ஓட்டுநர் நிறுத்தாமல் வேகமாக ஒட்டிச் சென்றார். இதனால் அந்த கண்டெய்னர் லாரியை பிடிக்க போலீசார் மற்ற காவல் நிலையங்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் அந்த கண்டெய்னர் லாரியை சேசிங் செய்தனர். ஒரு கிலோ மீட்டர், 2 கிலோ மீட்டர் அல்ல சுமார் 45 கிலோ மீட்டர் துரத்தி சென்று கண்டெய்னர் லாரியை நிறுத்தினர். போலீசாரை கண்டதும் ஓட்டுநர் லாரியை விட்டு தப்பி ஓடினார். கண்டெய்னர் லாரியை போலீசார் சோதனை செய்ததில் காலியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், லாரி ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில் பயத்தினாலேயே லாரியை வேகமாக ஓட்டி சென்றதாக கூறினார். திரைப்பட காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு சேசிங் செய்து பிடித்தும் கண்டெய்னர் லாரி காலியாக இருந்ததால் ஆந்திர போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.

The post வாகன சோதனையில் நிறுத்தாமல் சென்ற கண்டெய்னர் லாரி: 45 கிலோ மீட்டர் தூரம் சேசிங் செய்து பிடித்த ஆந்திரா போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: