சென்னையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு மாரத்தானில் 73,206 பேர் பங்கேற்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு மாரத்தானில் 73,206 பேர் பங்கேற்க உள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் நிகழ்ச்சி தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் ஆகஸ்ட் 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு மாரத்தானில் 73,206 பேர் பங்கேற்க உள்ளனர். மாரத்தானில் 73,206 பேர் ஓட உள்ளனர், இது கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற உள்ளனர்.

கலைஞர் நூற்றாண்டு மாரத்தானில் 1,063 திருநங்கைகள், திருநம்பிகள் கலந்துகொள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் மாரத்தான் தொடங்குகிறது. மாரத்தான் போட்டிக்கான பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவுத்திடலில் வழங்க உள்ளார் என்று தெரிவித்தார். மாரத்தானில் கலந்துகொள்ளும் மக்களுக்கு அன்று அதிகாலை 3.30 மணி முதல் மதியம் 12.30 வரை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க கூப்பன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.

The post சென்னையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு மாரத்தானில் 73,206 பேர் பங்கேற்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: