திருத்துறைப்பூண்டி அருகே கிராமப்புற சாலை மேம்பாடு திட்ட சாலை பணி துவக்கம்

திருத்துறைப்பூண்டி, ஆக. 4: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பழையங்குடி ஊராட்சி இளவரசநல்லூரில் சுமார் 350க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சாலை சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் பொதுமக்கள் கோரிக்கை அடுத்து முதலமைச்சர் கிராமபுற சாலை மேம்பாடு திட்டத்தில் 1.30 கிலோ மீட்டர் தூரம் ரூ.42.86 லட்சத்தில் சாலை பணி அமைக்க பூமிபூஜை மற்றும் துவக்கவிழா நடைபெற்றது. இதில் ஒன்றிய ஆணையர் அன்பழகன், ஒன்றிய குழு துணை தலைவர் வக்கீல் ராமகிருஷ்ணன், பொறியாளர் சூரியமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் கோகிலம் சங்கர், துணை தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நீடாமங்கலத்தில்

The post திருத்துறைப்பூண்டி அருகே கிராமப்புற சாலை மேம்பாடு திட்ட சாலை பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: