நீண்ட ஆலோசனைக்கு பின்னர் நாங்கள் இருவரும் கலந்து பேசி பிரிவதாக முடிவு செய்துள்ளோம். நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தி கொண்டுள்ளோம். அது தொடரும். எங்கள் குழந்தைகளின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி’ என்று அதில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பான பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில், தம்பதியினர் சட்டப்பூர்வ பிரிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தியது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோபி கிரெகோயர் ஆகிய இருவரும் 2005ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சேவியர் (15) எல்லா கிரேஸ் (14) மற்றும் ஹாட்ரியன் (9) ஆவார்கள்.
The post 18 ஆண்டு திருமண பந்தம் முறிவு மனைவியை பிரிந்தார் கனடா பிரதமர் appeared first on Dinakaran.
