கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

சேலம், ஆக.2: சேலம் மாவட்டம் மேட்டூர் மலையடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (33). இவர் சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஷெட்டில் தனது காரை நிறுத்தியிருந்தார். நேற்று காலை 11.30 மணியளவில் காரை ஸ்டார்ட் செய்தார். அப்போது திடீரென கார் இன்ஜினில் தீப்பிடித்தது. மளமளவென கார் முழுவதும் தீ பரவியது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால் கார் முழுவதும் எரிந்து நாசமானது. அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார் தீப்பிடித்து எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Related Stories: