குமரியில் முதல்முறையாக ஆக. 4 முதல் 6 வரை காற்றாடி திருவிழா..!!

குமரி: கன்னியாகுமரியில் முதல்முறையாக காற்றாடி திருவிழா ஆகஸ்ட் 4 முதல் 6 வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் இணைந்து குமரியில் காற்றாடி திருவிழா நடத்தப்பட உள்ளது. தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், வட மாநிலங்களில் இருந்து காற்றாடி இயக்குபவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 50க்கும் மேற்பட்ட வண்ணமயமான பல்வேறு வடிவங்களில் காற்றாடி பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது.

The post குமரியில் முதல்முறையாக ஆக. 4 முதல் 6 வரை காற்றாடி திருவிழா..!! appeared first on Dinakaran.

Related Stories: