இன்று முதல் புனரமைக்கும் பணி திருப்பதி தெப்பகுளத்தில் குளிக்க ஒரு மாதம் தடை: பிரமோற்சவ விழாவுக்கு ஏற்பாடு

திருமலை: திருப்பதி கோயில் பிரமோற்சவத்தை முன்னிட்டு தெப்பகுளம் புனரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதனால் பக்தர்கள் வரும் 31ம் தேதி வரை குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவத்திற்கு முன்பு தெப்பகுளத்தில் பழுதுகளை சரிபார்த்து புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு புதிய தண்ணீர் நிரப்புவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரமோற்சவம் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் தெப்பகுளம் புனரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.

இதற்காக தெப்பகுளத்தில் தண்ணீர் அகற்றப்பட்டு கீழ்பகுதி சுத்தம் செய்யப்பட்டு, குழாய்களில் இருக்கும் சிறு பழுதுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கிணறுகள் மேலும் சுத்தம் செய்யப்பட்டு வண்ணம் தீட்டுதல் மற்றும் பிற புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தெப்பகுளத்தில் தண்ணீர் நிரப்பிய பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த பணிகள் தொடர்ந்து ஒரு மாதம் நடைபெற உள்ளதால் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை தெப்பக்குளம் மூடப்படுகிறது. மேலும், பக்தர்கள் குளிக்க அதன் அருகிலேயே குளியல் அறையில் குழாய்கள் அமைக்கப்பட்டு அதில் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தினந்தோறும் சகஸ்ரதீப அலங்கார சேவைக்கு பின்னர் நடைபெறும் புஷ்கரணி ஆரத்தியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post இன்று முதல் புனரமைக்கும் பணி திருப்பதி தெப்பகுளத்தில் குளிக்க ஒரு மாதம் தடை: பிரமோற்சவ விழாவுக்கு ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: