ரஷ்யாவின் கடற்படை தினத்தை முன்னிட்டு 45 கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டு தோறும் ஜூலை 30ம் தேதி ரஷ்ய கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி பின்லாந்து வளைகுடாவில் செயிண்ட்.பீட்டர்ஸ் பர்கில் உள்ள நெவா ஆற்றிலும் நேற்று நடைபெற்ற அணிவகுப்பில் ரஷ்யா ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் 45 கப்பல்கள் இடம் பெற்றன.இந்த அணிவகுப்பில் மொத்தமாக 3 ஆயிரம் கடற்படை வீரர்கள் பங்கேற்றதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.
The post ரஷ்யாவின் கடற்படை தினத்தை முன்னிட்டு 45 கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி..!! appeared first on Dinakaran.
