தேசிய குத்துச்சண்டை போட்டி தமிழக மாணவர்கள் சாதனை

தூத்துக்குடி: மத்திய பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மாணவர்கள் 4 பேர் தங்கம், வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள கீழக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த கே.கைலாசபுரத்தில் காவலர் ராஜலிங்கம், தூத்துக்குடி புல் பாக்சிங் கிளப் கோரம்பள்ளம் பாலாஜி ஆகியோர் சுமார் 20 மாணவர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்தனர். இவர்களில் சிலர் அக்.26 முதல் 28ம்தேதி வரை மத்தியபிரதேச மாநிலம் காண்டுவாவில் நடந்த தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியில் பங்கேற்றனர்.இதில் 65-79 கிலோ எடை சீனியர் பிரிவில் மாணவர் தீபக் தங்க பதக்கமும், 55-60 கிலோ எடை பிரிவில் மாணவர் பாலாஜி வெள்ளி பதக்கமும், சப்-ஜூனியர் பிரிவில் ஜோஸ் செர்வின் தங்க பதக்கமும், ஜூனியர் பிரிவில் பரமசிவம் தங்க பதக்கமும் வென்றனர். இதனால் தமிழ்நாடு அணி தேசிய அளவில் 3ம் இடம் பிடித்தது. வெற்றிக்கோப்பையுடன் ஊர் திரும்பியவர்களுக்கு கிராம மக்கள் மேளதாளம் முழங்க சிலம்பாட்டத்துடன் உற்சாக வரவேற்பளித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்கள் கூறுகையில், எங்களுக்கு பயிற்சிக்காக தனி மைதானமோ, உபகரணங்களோ இல்லை. ஊர்மக்கள் ஏற்படுத்திக் கொடுத்த இடத்திலும் அவர்களின் ஒத்துழைப்பாலும் பயிற்சி எடுத்து வருகிறோம். அரசு எங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தால் நாங்கள் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல வெற்றிகளை பெற்றுத் தருவோம் என்றனர்….

The post தேசிய குத்துச்சண்டை போட்டி தமிழக மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: