பொன்னிவாடி ஊராட்சியில் குடிநீர் விநியோகத் தொட்டியை அமைச்சர் திறந்து வைத்தார்

 

தாராபுரம், ஜூலை31: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஊராட்சி ஒன்றியம் பொன்னிவாடி ஊராட்சி பள்ளபாளையம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அமைத்து தர வேண்டும் என்ற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு மின்மோட்டார் மற்றும் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.

சின்டெக்ஸ் தொட்டியை மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசன் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மின் மோட்டாரை இயக்கி குடிநீர் விநியோகத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொன்னிவாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பொன்னிவாடி ஊராட்சியில் குடிநீர் விநியோகத் தொட்டியை அமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: