ஆசிய ஆடவர் ஹாக்கி ேகாப்பைக்கு திருவண்ணாமலையில் உற்சாக வரவேற்பு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பங்கேற்பு சென்னையில் வரும் 3ம் தேதி தொடங்குகிறது

திருவண்ணாமலை, ஜூலை 30: திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், 7வது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டிக்கான கோப்பை அறிமுக விழா நேற்று நடந்தது. அதில், துணை சபாநாயகர் கலந்துகொண்டார்.
சென்னையில் வரும் 3ம் தேதி 7வது ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஹாக்கி கோப்பை-2023 போட்டி தொடங்குகிறது. தொடர்ந்து 12ம் தேதி வரை நடைபெறும் போட்டியை இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்துகிறது. இப்போட்டிகளில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய 6 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. அதையொட்டி, 7வது ஆசிய சாம்பியன் ஆடவர் ஹாக்கி ேகாப்பை -2023 போட்டிக்கான கோப்பை, அனைத்து மாவட்டத்திற்கும் தொடர் ஓட்டமாக கொண்டுசெல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து, வரும் 3ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெறும் இடத்துக்கு இக்கோப்பை சென்றடைய உள்ளன.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நேற்று ஹாக்கிப் போட்டி கோப்பை கொண்டு வரப்பட்டது. அதனை, அண்ணா நுழைவு வாயில் அருகே மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் பெற்று, விளையாட்டு வீரர்களுடன் பேரணியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்து கொண்டுவரப்பட்டு, கலெக்டர் முருகேஷிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து, ஆசிய ஆடவர் கோப்பை போட்டிக்கான கோப்பை அறிமுக விழா, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அப்போது, சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர்.

அதைத்தொடர்ந்து, யானை வடிவிலான பொம்மன் இலச்சினையை அறிமுகப்படுத்தி வைத்தனர். பின்னர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்துக்கு ஹாக்கிக் கோப்பை பயணம் புறப்பட்டது.
மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கு மரக்கன்று பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில ஹாக்கி சங்க துணைத்தலைவர் ஜூபேர் அகமது, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், ஹாக்கி சங்க நிர்வாகிகள் சதீஷ்குமார், ராஜேஷ், விளையாட்டு விடுதி மேலாளர் சண்முகபிரியா மற்றும் எம்.ஆர்.கலைமணி, டி.பரத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ஆசிய ஆடவர் ஹாக்கி ேகாப்பைக்கு திருவண்ணாமலையில் உற்சாக வரவேற்பு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பங்கேற்பு சென்னையில் வரும் 3ம் தேதி தொடங்குகிறது appeared first on Dinakaran.

Related Stories: