அமெரிக்க அதிபர் தேர்தலில் மேலும் ஒரு இந்திய வம்சாவளி போட்டி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட போவதாக இந்திய வம்சாவளி இன்ஜினியரான ஹிர்ஷ்வர்தன் சிங் (38) அறிவித்துள்ளார். வரும் 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தெற்கு கரோலினா முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலி(51), கோடீஸ்வர தொழிலதிபர் விவேக் ராமசாமி(37) ஆகிய 2 பேர் அதிபர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். தற்போது, 3வது இந்திய வேட்பாளராக ஹிர்ஷ்வர்தன் சிங் என்பவரும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 27ம் தேதி பெடரல் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அடுத்த ஆண்டு ஜூலை 15ம் தேதி நடக்கும் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

The post அமெரிக்க அதிபர் தேர்தலில் மேலும் ஒரு இந்திய வம்சாவளி போட்டி appeared first on Dinakaran.

Related Stories: