கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்குவிபத்து: மதிப்புமிக்க உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகர் கோவில் செல்லும் வழியில் பழைய பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் பல தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 3 வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் மேலும் 5 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். எனது பிரார்த்தனைகளும் எண்ணங்களும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்குவிபத்து: மதிப்புமிக்க உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: