வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக 9 கவுன்சிலர்கள் தேர்வு

 

ஈரோடு, ஜூலை 28: ஈரோடு மாநகராட்சியில் வரி விதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக 9 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டரங்களில் வரி விதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களை தேந்தெடுப்பதற்கான கவுன்சிலர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் வரி விதிப்பு மற்றும் மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களாக மாநகராட்சி கவுன்சிலர்கள் பழனியப்பா செந்தில்குமார், ஆதி ஸ்ரீதர், கோகிலாவாணி, ஈபி ரவி, மேனகா, மோகன்குமார், ஜெகதீசன், மணிகண்ட ராஜா, தங்கவேலு உள்ளிட்ட 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த குழு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமையில் செயல்படும். மாநகராட்சியில் வரி நிர்ணயம் தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து மேல்முறையீடு செய்வோரின் மனுக்கள் மீது விரைந்து விசாரித்து தீர்வு ஏற்படுத்தவும், மாநகராட்சிக்கு நிலுவையின்றி வருவாய் கிடைக்கவும், இக்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக 9 கவுன்சிலர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: