ஓட்டல், பழக்கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு

போச்சம்பள்ளி, ஜூலை 28: புளியம்பட்டியில் ஓட்டல்கள், பழக்கடைகளில் சுகாதார துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். போச்சம்பள்ளிக்கு உட்பட்ட புளியம்பட்டி பஞ்சாயத்தில், சுகாதார ஆய்வாளர்கள் கந்தவேல், சசிகுமார், கிருபாகரன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர், போச்சம்பள்ளி மற்றும் புளியம்பட்டி பஞ்சாயத்துகளுக்கு சென்று அங்கு இயங்கி வரும் கடைகள், ஓட்டல்கள், பழக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு தூய்மை இல்லாமல் உணவு சமைப்பது, பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் வீடுகளில் ஆய்வு செய்து கொசு உற்பத்தி, ஆகாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. டயர்கள் அப்புறப்படுத்துதல், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்துதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் தமிழ்நாடு பொது சுகாதார சட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த ஆய்வின் போது, புளியம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரங்கநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post ஓட்டல், பழக்கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: