இந்திய துணை கண்டத்தை மையமாக கொண்டு ஐம்மு காஷ்மீரில் தளம் அமைக்கிறது அல்கொய்தா: ஐநா அறிக்கையில் எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் சபை: அல்-கொய்தா அமைப்பு ஜம்மு-காஷ்மீர், வங்கதேசம் மற்றும் மியான்மரில் தளம் அமைக்கிறது என்று ஐநா எச்சரித்து உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.எஸ்.ஐ.எல் (தாயிஷ்) மற்றும் அல்-கொய்தா அமைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன. அதில் அல்-கொய்தா அமைப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் தளத்தை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா மையமானது 30 முதல் 60 உறுப்பினர்களுடன் நிலையானதாக உள்ளது.

அதே நேரத்தில் அதன் போராளிகள் எண்ணிக்கை 400 என மதிப்பிடப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆப்கன் நாட்டில் மட்டும் 2 ஆயிரம் பேர் உள்ளனர். இந்தியத் துணைக் கண்டத்தில், அல்-கொய்தாவில் ஏறக்குறைய 200 போராளிகள் உள்ளனர். இந்திய துணைக்கண்டத்தை மையமாக கொண்டு ஐம்மு காஷ்மீர், வங்கதேசம், மியான்மரில் தளம் அமைக்க முயற்சி நடக்கிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இந்திய துணை கண்டத்தை மையமாக கொண்டு ஐம்மு காஷ்மீரில் தளம் அமைக்கிறது அல்கொய்தா: ஐநா அறிக்கையில் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: