புதுப்பிக்கப்பட்ட கூட்டணியை மக்கள் உறுதியாக நிராகரிப்பார்கள்: எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி குறித்து ராஜ்நாத் சிங் விமர்சனம்

டெல்லி: எதிர்கட்சிகளின் கூட்டணி மீதான பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் I.N.D.I.A கூட்டணியை கடுமையாக சாடியுள்ளார். பாஜக எம்.பி.க்களின் வாராந்திர கூட்டத்தில் ஆட்சி செய்ய விரும்புபவர்கள், நாட்டை உடைத்த கிழக்கு இந்தியக் கம்பெனி, இந்தியன் முஜாய்தீன் உள்ளிட்டவற்றில் உள்ள பெயரைக் கொண்டுள்ளனர். மக்கள் ஒரு போதும் தவறாக வழி நடத்தப்படமாட்டார்கள். தோல்வி, சோர்வு, நம்பிக்கையின்மை போன்றவற்றால் மோடியை எதிர்ப்பது ஒற்றையே கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்க்கட்சிகளாக மட்டுமே இருக்க முடிவு செய்திருப்பதையே அவர்களின் நடத்தை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் I.N.D.I.A கூட்டணியை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் X இணையதள பக்கத்தில் விமர்சித்துள்ள அவர்; எதிர்க்கட்சிகள் தங்கள் கடந்த காலத்தை மறைக்கும் முயற்சியில் கூட்டணி பெயரை மாற்றி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். I.N.D.I.A என்ற பெயரை மாற்றுவதால் அவர்களின் கடந்த கால செயல்கள் அழிந்துவிடாது என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்திய மக்களுக்கு இந்த பிரச்சாரத்தை புரிந்து கொள்ளும் ஞானம் உள்ளது என பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங். இந்த புதுப்பிக்கப்பட்ட கூட்டணியை மக்கள் உறுதியாக நிராகரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

The post புதுப்பிக்கப்பட்ட கூட்டணியை மக்கள் உறுதியாக நிராகரிப்பார்கள்: எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி குறித்து ராஜ்நாத் சிங் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: