மேலத்தெரு யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திருச்செந்தூர் சுடலை மாடசுவாமி கோயில் கொடை விழா

திருச்செந்தூர், ஜூலை 26: திருச்செந்தூர் மேலத்தெரு யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட  சுடலை மாடசுவாமி கோயில் கொடை விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். திருச்செந்தூர் மேலத்தெரு யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட  சுடலை மாடசுவாமி கோயில் கொடை விழா, ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு கொடை விழாவையொட்டி கடந்த 18ம் தேதி திருக்கால் நாட்டு விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் (24ம் தேதி) கொடை விழா தொடங்கியது. தொடர்ந்து இன்று (26ம் தேதி) வரை விழா நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயில் சண்முக விலாசத்தில் இருந்து தீர்த்தவாரி எடுத்து மேளதாளத்துடன் திருவீதி வழியாக கோயில் வந்து சேருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று (25ம் தேதி) மதியம் அன்னதானம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மீன்வளம்- மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் வாள் சுடலை, மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்மசக்தி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், தூத்துக்குடி சுரேஷ், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், கவுன்சிலர் செந்தில்குமார், மேலத்தெரு யாதவ மகாசபை தலைவர், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், கொடை விழா கமிட்டியாளர்கள் மற்றும் ராம் சுப்பிரமணியன், ஓட்டல் அர்ச்சனா சக்தி, சுந்தரம் காட்டேஜ் ஆறுமுகம், சாந்தி பேக்கரி ராதாகிருஷ்ணன், வீரபாகு மகால் வீரபாகு, பொறியாளர் நாராயணன், ஓட்டல் தர்மாஸ் கிராண்ட் ராஜகண்ணன், திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் இசக்கிமுத்து, மாவட்ட சமூக வலைதள பொருளாளர் நம்பிராஜன், யாதவ வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி, செயலாளர் முத்துக்குமார், துணை செயலாளர் வன்னியராஜா, பொருளாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் கவுரவ ஆலோசகர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள், சுபா கோபால், பொறியாளர்கள் செந்தில் ஆறுமுகம், நாராயணன், எஸ்.கே.மோட்டார்ஸ் செந்தில்ஆறுமுகம், விஜய் கணேசன், பேன்சி டெய்லர் குன்றுமலையான், லட்சுமி சூமார்ட் கண்ணன், பன்னீர்செல்வம், வழக்கறிஞர் பெருமாள், தோசை கடை ஆறுமுகம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (26ம் தேதி) அதிகாலை படைப்பு தீபாராதனை, 7 மணிக்கு பொது அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

The post மேலத்தெரு யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திருச்செந்தூர் சுடலை மாடசுவாமி கோயில் கொடை விழா appeared first on Dinakaran.

Related Stories: