சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் விக்கிரமராஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் 30 பேரை நியமனம் செய்ததற்காக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டோம். மேலும், சிறு வியாபாரிகளுக்கு உதவி தொகையை உயர்த்தி தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதேபோல, வியாபாரிகளின் குழந்தைகளின் பள்ளி படிப்புக்கான அதிகமான தொகையை ஒதுக்குவோம் என முதல்வரும் உறுதியளித்துள்ளார்கள். மேலும், ஜி.எஸ்.டி வரி விதிப்பில் உள்ள குளறுபடிகளை சீர் செய்ய தமிழகம் முழுவதும் அனைத்து வணிகர்களையும் ஒருங்கிணைத்து ஆக.23ம் தேதி சென்னையில் கூட்டம் நடத்த உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அதற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
The post ஆகஸ்ட் 23ல் வணிகர் சங்கங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: விக்கிரமராஜா தகவல் appeared first on Dinakaran.