நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வருசநாடு பகுதியில் வறண்டது வைகை ஆறு: கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

வருசநாடு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால் வருசநாடு பகுதியில் மூல வைகை ஆறு வறண்டு கிடக்கிறது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலை உள்ளது. தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக வருகிறது. மேலும், மழை பெய்யாததால் வருசநாடு மூல வைகை ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் இல்லை. இதனால் மூல வைகையாற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலை உருவாகியுள்ளது.

மேலும், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தநிலையில், இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மூலவைகை ஆற்றுப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வருசநாடு பகுதியில் வறண்டது வைகை ஆறு: கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: