தமிழ்நாட்டில் கும்பகோணம், சேலம், மதுரை, நெல்லை ஆகிய கோட்டங்களில் 1602 பணியிடங்கள் உள்ளது. அதில் முதற்கட்டமாக 1402 பணியிடங்களை நிரப்ப போக்குவரத்து வாரியம் பரிந்துரை செய்திருந்தது.
இந்த பரிந்துரையை ஏற்கும் வகையில் முதற்கட்டமாக கும்பகோணம் கோட்டத்திற்கு 174 பேரும், சேலம் கோட்டத்திற்கு 284 பேரும், மதுரை கோட்டத்திற்கு 136 பேரும், நெல்லை கோட்டத்திற்கு 188 பேரும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என்ற அடிப்படியில் 812 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் அதற்கான கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தமிழ், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும், கனரக வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும், நடத்துனருக்கான உரிமம் வைத்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு 812 ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
The post அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியீடு! appeared first on Dinakaran.
