ஒன்றிய அரசை கண்டித்து இந்திய தேசிய மாதர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்,ஜூலை25: இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நாகப்பட்டினம் அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மேகலா தலைமை வகித்தார். அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சந்திரமோகன் முன்னிலை வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் பேசினர். மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை அடக்க முடியாத ஒன்றிய அரசு பதவி விலக வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து இந்திய தேசிய மாதர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: