அண்ணனுடன் காதல் ; தம்பியுடன் டும்..டும்..: தகாத உறவால் சகோதரர் கொலை

ஏற்காடு: அண்ணணை காதலித்து தம்பியை திருமணம் செய்த பெண், அண்ணனுடன் தகாத உறவு வைத்திருந்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் அண்ணனை தம்பி கொலை செய்தார். சேலம் மாவட்டம், ஏற்காடு கொம்மக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன்கள் வினோத்(26), விவேக்(25). கூலி தொழிலாளர்கள். வினோத்திற்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். விவேக்கின் மனைவி வெண்ணிலா(23), இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். விவேக்கின் மனைவி வெண்ணிலாவுக்கும், வினோத்துக்கும் படிக்கும் காலத்தில் இருந்தே காதல் இருந்துள்ளது. எதிர்பாராத விதமாக, வினோத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் காதலியான வெண்ணிலாவை அவ்வப்போது வினோத் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் விவேக்கை திருமணம் செய்து கொள்ளுமாறு, வெண்ணிலாவின் வீட்டில் வற்புறுத்த வேறு வழியின்றி அண்ணனை காதலித்த வெண்ணிலா தம்பி விவேக்கை திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகுதான், வினோத், வெண்ணிலாவின் தகாத உறவு, தம்பி விவேக்கிற்கு தெரிய வந்தது. இதையடுத்து மனைவியிடம், முன்பு நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனிமேல் ஒழுக்கமாக இரு என விவேக் கண்டித்துள்ளார். ஆனாலும் இவர்களின் உறவு நீடித்துள்ளது. இதையடுத்து அண்ணன், தம்பி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.

இதை தொடர்ந்து கடந்த 19ம் தேதி மனைவி வெண்ணிலாவை, புதூர் கிராமத்தில் உள்ள அவரது அம்மா வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு விவேக் திரும்பினார். வழியில் அண்ணன் வினோத் எதிரே வந்துள்ளார். எங்கே சொல்கிறாய் என விவேக் கேட்டதற்கு உனது மனைவியை பார்க்கவே போகிறேன் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விவேக் அங்கு கிடந்த கல்லை எடுத்து, வினோத் தலையில் போட்டு தாக்கிவிட்டு, மீண்டும் புத்தூர் கிராமத்திற்குச் சென்று மனைவியிடம் நடந்ததை கூறியுள்ளார்.

யார் இதைப்பற்றி கேட்டாலும், வினோத்தை காட்டெருமை மோதி தாக்கியதாக கூற வேண்டும் என வெண்ணிலாவிடம் கூறியுள்ளார். இதற்கிடையே காயமடைந்த வினோத்தை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஏற்காடு போலீசார் விசாரணை நடத்திய போது, வெண்ணிலாவும், விவேக்கும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். போலீசார் விசாரணையில் தம்பி விவேக் தான், வினோத்தை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 21ம் தேதி விவேக்கை போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். இந்நிலையில் வினோத் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றிநீதிமன்றத்தில் விவேக்கை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post அண்ணனுடன் காதல் ; தம்பியுடன் டும்..டும்..: தகாத உறவால் சகோதரர் கொலை appeared first on Dinakaran.

Related Stories: