சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 100 பெண்களை ஏமாற்றிய டுபாக்கூர் டைரக்டர் கைது

ஹரித்துவார்: சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய டுபாக்கூர் டைரக்டரை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்த சன்னி குமார் வர்மா (33) என்பவர், தன்னை பிரபல பாலிவுட் படங்களின் காஸ்டிங் டைரக்டராகக் காட்டிக் கொண்டு, சினிமாவில் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக பலரிடம் கூறிவந்தார்.

இதற்காக 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் சமூக வலைதளங்களின் மூலம் அவர்களது புகைப்படங்கள் மற்றும் பிற விபரங்களை கேட்டு வாங்கிக் கொண்டார். பின்னர் அவர்களில் சிலரை தேர்வு செய்து, ‘எலன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெரிவித்தார். ஆனால் அவர் கூறியபடி பெண்களுக்கு சினிமா வாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை.

அதிர்ச்சியடைந்த பெண்கள், தாங்கள் சன்னி குமார் வர்மா என்பவரால் ஏமாற்றப்பட்டதாக போலீசில் புகார் அளித்தனர். அதையடுத்து போலீசார், சன்னி குமார் வர்மாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 100 பெண்களை ஏமாற்றிய டுபாக்கூர் டைரக்டர் கைது appeared first on Dinakaran.

Related Stories: