தொடர் மழையால் வீதிகளில் வெள்ளம்; சாலைகளில் துள்ளிக்குதித்த மீன்களை போட்டிபோட்டு அள்ளிய மக்கள்

திருமலை: மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலத்தில் தொடர் மழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தெலங்கானா மாநிலம் முழுவதும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கரீம்நகர் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்குடன் மீன் வரத்தும் அதிகரித்துள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளப்பெருக்குடன் மீன்கள் அடித்துக்கொண்டு வருகிறது. ராமடுகு மண்டலத்தில் உள்ள வெலிச்சலாவில் நூற்றுக்கணக்கான மீன்கள் வந்ததால் அதனை பொதுமக்கள் கூட்டமாக வந்து பிடித்து செல்கின்றனர்.

வலைகள் மூலமும் மீன் பிடிக்கின்றனர். இதில் ஒரு மீன் 10 கிலோ முதல் 15 கிலோ வரை எடை உள்ளது. ஒரே நேரத்தில் மீன்கள் பிடிக்க வலைவீசினால், 2 பையில் அள்ளிச்செல்லும் வகையில் மீன்கள் பிடிபடுகிறது. அனைத்து மீன்களையும் கொண்டு செல்ல சிறப்பு ஆட்டோக்கள் வரவழைக்கப்படுகிறது. ஏராளமான மீன்களை கையில் பிடித்தபடி மக்கள் செல்பி எடுத்தனர். இந்த வெள்ளத்தில் டன் கணக்கில் மீன்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

The post தொடர் மழையால் வீதிகளில் வெள்ளம்; சாலைகளில் துள்ளிக்குதித்த மீன்களை போட்டிபோட்டு அள்ளிய மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: