வனபத்ரகாளியம்மன் கோயிலில் தமிழ்முறைப்படி லட்சார்ச்சனை

 

மேட்டுப்பாளையம், ஜூலை 22: கோவை, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று கோயில் வளாகத்தில் தமிழ்முறைப்படி லட்சார்ச்சனை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமமும் நடைபெற்றது. இதனை கோயில் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத், தாரணி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வனபத்ரகாளியம்மனுக்கு பல வண்ண மலர்களால் தமிழ் முறையில் ஓதுவார்கள் ஒரு லட்சம் முறை அம்மனை திரு நாமத்தை வணங்கினர். லட்சார்ச்சனையை மூலத்துறை சக்திவேல்,கு ழந்தைவேல் ஆகியோர் நடத்தி வைத்தனர். உபயதாரர்கள் பாக்கியலட்சுமி குடும்பத்தார்கள், கார்த்திக், கனகாச்சலம், நந்தினி, ஜெகதா, பிரபு, பூர்ணிமா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.இதில் கோயில் செயல் அலுவலரும்,உ தவி ஆணையருமான கைலாசமூர்த்தி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

The post வனபத்ரகாளியம்மன் கோயிலில் தமிழ்முறைப்படி லட்சார்ச்சனை appeared first on Dinakaran.

Related Stories: