பார்லி. தேர்தலில் போட்டியா? கவர்னர் தமிழிசை சினிமா ‘பஞ்ச்’

புதுச்சேரி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் போட்டியா? என்ற கேள்விக்கு சினிமா பாணியில் கவர்னர் தமிழிசை பதில் அளித்து உள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் புதுப்பிக்கப்பட்ட ராஜீவ் காந்தி சிறுவர் பூங்காவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘புதுச்சேரியில் உள்ள 70 பூங்காக்கள் `மிஷின் பார்க்’ என்ற பெயரில் புதுப்பிக்கப்படும். கடந்த காங்கிரஸ் அரசு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்ட 10 சதவீதம் இடஒதுக்கீட்டில் மாறுப்பட்ட கருத்துகள் இருந்ததால் சிக்கல் இருந்தது.

இம்முறை எந்த சிக்கல் இல்லாமல் அனுமதி பெறுவதற்கு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா, இல்லையா என்று இப்போது கூற முடியாது. இப்போது ஆளுநராக இருக்கும்போது எப்படி தேர்தலில் போட்டியிட முடியும். என்னுடைய செயலுக்கு உள்அர்த்தம் கற்பிக்கக் கூடாது. புதுவை தொகுதியில் போட்டியிடுவேனா? இல்லையா என்பது பிற்காலத்தில் பார்க்க வேண்டியது. அதை ஆண்டவனும், ஆண்டுக்கொண்டு இருப்பவரும் முடிவு செய்வார்கள். பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது எனது கருத்து. மணிப்பூரில் பெண்ணுக்கு நடந்த நிகழ்வு மிகவும் மோசமானது. இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்கக்கூடாது,’ என்றார்.

The post பார்லி. தேர்தலில் போட்டியா? கவர்னர் தமிழிசை சினிமா ‘பஞ்ச்’ appeared first on Dinakaran.

Related Stories: