கோம்பை பேரூராட்சியில் ரூ.84 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

 

தேவாரம், ஜூலை 19: கோம்பை பேரூராட்சியில் ரூ.84 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப்பணிகளை கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். கோம்பை பேரூராட்சியில், புதிய சாலைகள், கழிவு நீர் கால்வாய், மற்றும், புதிய குடிநீர் திட்டங்கள் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி, கோம்பை பேரூராட்சி, 4வது வார்டு காமராஜர் நகரில், 30 ஆண்டு கோரிக்கையான புதிய தார் ரோடு மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க ரூபாய் 84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோல் கோம்பை பேரூராட்சிக்கு உட்பட்ட 3 இடங்களில் ஆழ்துளை கிணறு தண்ணீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினரும், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 15வது வார்டு மக்கள் கோரிக்கையை ஏற்று புதியசாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதியளித்தார். நிகழ்வில், உத்தமபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், பேரூர் செயலாளர் முருகன், பேரூராட்சி மன்ற தலைவர் முல்லை மோகன்ராஜா, மற்றும் வார்டு கவுன்சிலர்கள், கலந்து கொண்டனர்.

The post கோம்பை பேரூராட்சியில் ரூ.84 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: